உடம்பில் நடுக்கம் ஏற்படும். எரிச்சலெடுக்கும். நினைவு அழியும். தாகமதிகரிக்கும். புறந்தாளில் வீக்கமேற்படும். இவை பிரலாப சந்நிக் குறிகளாகும்.
Top bar Ad
15/1/19
பிரலாப குணம்
உடம்பு நடுக்கும் பிரதாபிக்கு முள்ளமறியா நினைப்பாகும்
தடம்பு நினைவுந் தானன்றித்தாகம் பெருகும் புறந்தாள்கள்
பிடம்பு வீக்க மிவைகண்டால் பிரலாபசந்நியீதென்றே
கடம்பு மலரின் குழல் மாதே! கருதிச்சொன்னோ மறிவீரே.
14/1/19
ரெத்தசாட்டியன் குணம்
குருதிதோன்ற வாந்திக்கும் கூறுமூர்ச்சைச் சுரமோகம்
பருதிபோலத் தாகிக்கும் பகட்டும் விக்கல் விறுமையதாம்
துருகிக் கழிச்சல் நினைவறியாத் தோன்றும் வசனம் மெய்நோகும்
இருகும் மெய்யிற் பொன் பச்சை யிரத்த சாட்டியக் குறிதானே.
இரத்தம் தோன்றும் வரை வாந்தியெடுக்கும். மூர்ச்சை, சுரம், மயக்கம், அதிக தாகம், விக்கல், கழிச்சல், நினைவு தடுமாற்றம், உடம்பு வலி முதலான குறிகளேற்படில் அது இரத்தசாட்டியனாகும்.
புக்குநேத்ரன் குணம்
கண்ணேபெருக்குஞ் சுவாசமுடன் காதுங்கேளாச் சுரந்தோன்றும்
நண்ணாய்மோகம் பெரிதாகும் நாடுபிரலாப நடுக்கலுடன்
தண்ணார் புவியில் தான் படுக்குஞ் சாற்றுங் குறிகளிவை கண்டால்
பெண்ணே! புக்கு நேத்திரன் பேரைச்சொன்னோ மறிவீரே.
கண்கள் பெரிதாகும். (விழிகள் பிதுங்கும்)
சுவாசம் அதிகரிக்கும். காது கேட்காது. சுரம் அதிகரிக்கும்.
மயக்கம் ஏற்படும். உளரல், நடுக்கல் முதலியவையுண்டாகிக்
குளிர்ச்சிக்காக வெறும் தரையில் படுக்க ஆரம்பிப்பான்.
இவை புக்குநேத்திர லக்ஷ்ணங்களாகும்
. (பக்ன நேத்திர சந்நி)
13/1/19
அந்தகன் குணம்
தலையைவலிக்கும்மோகிக்கும்தாகமெடுக்கும் விக்கலுட
னுலையில் காய்ச்சல் மிகத்தோன்றுமுடம்புநாக்குஞ் சந்தாபங்
குலையை நடுக்கு மந்தகன் தான் கூறுஞ்சந்நியெனச் சொல்லுஞ்
சிலையை யெடுத்த நுதல்மாதே தெரியச்சொன்னோ மறிவீரே.
தலைவலி, மயக்கம், தாகம், விக்கல், சுரம் இவைகள் அதிகமாகத் தோன்றும். உடம்பிலும் நாக்கிலும் எரிச்சல் காணும். நடுக்கல் உண்டாகும். இக்குறிகள் அந்தக சந்நியின் லக்ஷ்ணங்களாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)