- வியான வாயு பசுவின் பால் நிறமுள்ளது.
- உடலில் இருக்கும் எல்லா துவாரங்களிலும் (மூட்டுக்களிலும்) இருந்து கொண்டு உடலை நீட்டுதல், முடக்கிக் கொள்ளல் முதலான செய்கைகளையும் அன்ன ஆகாராதிகளை உட்செலுத்தவும் கூடியது.
- வியானன் தோலில் நின்று பரிசங்களை அறிவிக்கும்.
- உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை ஏற்றி செல்லுதல் ,செயல்படுத்துதல் நரம்புகளை இயங்க வைக்கிறது.
- இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் .
- உடலின் அனைத்துப் பகுதியிலும் சஞ்சரிக்கும் இந்த வாயுவானது, உண்ட உணவைத் திப்பி வேறாகவும், சாறு வேறாகவும் செய்து கொண்டிருக்கும்.
- இது தொழில் காற்று என்று அழைக்கப்படும்.
Top bar Ad
26/10/18
வியான வாயு
25/10/18
அபான வாயு
அபான வாயுவின் நிறம் பச்சையாகும்.
குய்யத்தை இருப்பிடமாகக் கொண்டது. மலம், சிறுநீர் முதலியவைகளை வெளிப்படுத்தும்,
ஆசனத்தைச் சுருக்கவல்லது.
அதாவது அபானன் கீழ்நோக்கிக் குதத்தையும் குய்யத்தையும் பற்றி நின்று மலஜலங்களைக் கழிக்கும்.
24/10/18
பிராண வாயு
பிராண வாயு நீல வர்ணமாயிருக்கும்.
நெஞ்சிலிருந்து கட்டைவிரல் முடிவரை சஞ்சாரம் செய்யும், மயிர்க்கால்கள் தோறும் சஞ்சரிப்பதுடன் உள் மூச்சுக்கும் வெளி மூச்சுக்கும் ஆதாரமானது.
அன்னத்தைச் செரிப்பிக்கும்.
பிராணன் இனமொன்றுக்கு 27600 சுவாசங்கள் வீதம் தேகத்தில் சென்று வியாபிக்கின்றது.
பிராண வாயுக்கு தூய தமிழில் உயிர்க்காற்று என்று பெயர்.
23/10/18
தச வாயுக்கள்
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்ஜயன் என்பவை தசவாயுக்களாம். தசம் என்றால் பத்து என்று பொருள்படும். மனித உடம்பின் இயக்கத்திற்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உறுதுணையாய் இருப்பது இந்த தச வாயுக்களே ஆகும்.
சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவன் எனப்படுவான்.
செல்வம் நிறைந்த மனிதனாக வாழ்வதை விட ஆரோக்கியம் நிறைந்த மனிதனாக வாழ்வதே சிறந்தது. செல்வம் எண்ணற்ற அளவில் இருந்தாலும் மனம் நிறைவாக (மன நிறைவு) இருக்காது. ஆரோக்கியம் நிறைந்த மனிதனால் மட்டுமே அனைத்து செல்வங்களையும் சுகங்களையும் அனுபவிக்க முடியும்.
அவ்வாறு இவ்வுடல் ஆரோக்கியமாக இருக்க இந்த தச வாயுக்கள் உறுதுணைகின்றன.
மூச்சுக் காற்று இல்லாமல் போனால் இவ்வுடல் இயங்காது ?
ஏன் என்றால் சுவாசம் தேவை . சுவாசித்தால் தான் இருதயம் பணிபுரியும். இருதயம் பணிபுரிந்தால் தான் இரத்த ஓட்டம் நடைபெறும். இரத்த ஓட்டம் சீராக நடந்தால் தான் இவ்வுடலை இயக்க முடியும்.
இவ்வாறு நாம் படித்து இருக்கிறோம். ஆனால் சித்தர்கள் கூற்றுப்படி இதயத்திற்கு மட்டும் வாயு செல்லவில்லை. இரத்த ஓட்டம் நடைபெற, பசியைத் தெரிவிக்க , கண் இமை மூட , சிரிக்க, கொட்டாவி விட ,மல ஜலம் கழிக்க , தும்மல், விக்கல் என அனைத்திலும் இந்த தச (பத்து) வாயுக்களின் பங்கு உள்ளது.
தசவாயுக்கள் நம் உடலில் பல்வேறு செயல்களை தன்னிச்சையாக செய்கிறது. உயிர்க் காற்று (பிராண வாயு) இன்றி ஏனைய ஒன்பது வாயுக்களும் செயல்பட முடியாது.