பிரிதிவி (நிலம்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (காற்று), ஆகாசம் (ஆகாயம்) என்பது பஞ்ச பூதங்களாகும்.
தேகத்தில் பிரிதிவியின் அம்சமாவதுமயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை, இவைகளாகும்,
தேகத்தில் அப்புவின் அம்சமாவதுநீர், உதிரம், வெள்ளை பாகங்கள், மூளை, மஜ்ஜை.
தேகத்தில் தேயுவின் அம்சங்கள்ஆகாரம், பயம், போகம், சோம்பல், தூக்கம்.
தேகத்தில் வாயுவின் அம்சங்களாவனஓடுதல், இருத்தல், நடத்தல், நிற்றல், கிடத்தல்.
தேகத்தில் ஆகாசத்தின் அம்சங்கள்காமம், க்ரோதம், மோகம், லோபம், மதம் இவைகளாகும்.