முன்னுரை
சுந்தரானந்தர் சதுரகிரி மலையில் ஆதிசித்தரான அநாதி சித்தரின் அருள் பெற்றவர். சதுரகிரி மலை உச்சியில் அநாதி சித்தரை சுந்தர லிங்கமாக பிரதிஷ்டை செய்து அரூப நிலையிலிருந்து இன்றும் வழிபட்டு வருபவர். அவர் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் என்றும், கிஷ்கிந்தா மலை உச்சியில் வாழ்ந்து வரும் நவகண்ட ரிஷியின் பேரன் என்றும் சப்தகாண்டம் 7000ல் போகர் கூறியுள்ளார்.
சட்டை முனியின் சீடர்
அடிக்கடி சமாதி கூடி நீண்ட காலம் நிஷ்டையிலிருந்து வெளி வருவதும் அடிக்கடி விண்வெளிப் பயணம் சென்று வருவதும் அவரது வழக்கம் என்றும் கூறப்டுகிறது. அவரது வாக்கிய சூத்திரம் முதல் பாடலில் வரும்.
என்ற அடிகள் அவர் சட்டை முனியின் சீடர் என்பதை வெளிப்படுத்துகிறது. சுந்தரானந்தரும் அவரது குருவான சட்டை முனியும் நீண்ட காலம் சதுரகிரிமலை மீதுள்ள சுந்தரலிங்கத்தை வழிபட்டுள்ளனர் என்பது சதுரகிரி புராணச் செய்தி. அவருக்கு பரமானந்தர், வாலைச்சித்தர் என்று இரு சீடர்கள் இருந்ததாகவும் தெரிகிறது. இவர் சோதிடம், வைத்தியம் சிவயோகம் என்ற முப்பெருந்துறைகளிலும் பல நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் வைத்திய காவியம், சோதிடகாவியம், சிவஞானபோதம் என்பவை சில.
அவர் தமிழகம் முழுவதும் சென்று பல சித்த சாதனைகள் புரிந்த வண்ணம் வெற்றியுலா வந்து வல்லபர் (எல்லாவற்றையும் செய்ய வல்லவர்) என்ற சிறப்புப் பெற்றார் என்ற ஒரு செவிவழிச் செய்தியும் இருந்து வருகிறது. இப்படி செவி வழியாக கூறப்பட்டு வரும் சம்பவங்களில் ஒன்று வருமாறு:
கல் யானை கரும்பு தின்ற கதை
மதுரை
தமிழ் விளையாடிய மதுரையம்பதிக்கு (மதுரை) செல்ல வேண்டியது அவசியம். இந்த , மதுரை மாநகரம் தமிழ் பண்டிதர்களால் நிரம்பி இருந்த காலம் அது. இங்கு, மக்கள் யாராவது இருவர் சந்தித்து கொண்டாலும், அவர்கள் பேசிக் கொள்வதும் கவிதை நயத்தில் தான் இருக்கும். அந்த உரையாடலில் குற்றம் காண்பதும், பின்னர் அரண்மனை முற்றம் ஏறுவதும் மதுரையில் மிகச் சாதாரணமாக நடக்கும்.
ஒரு புறம், மதுரைக்கு முத்துக்கள் குவியும் நகரம் எனும் பெருமையும் உண்டு. மதுரை என்றாலே, அதனை ஆண்ட பாண்டியர்களும், அவர்களது மீன் கொடியும், இலக்கியத் தமிழும் தான் நமது நினைவுக்கு வரும். ஆனால், இது தவிர, நாம் நினைக்க மறந்த ஒன்றும் உள்ளது.
அபிஷேகப் பாண்டியன்
அது தான், அபிஷேகப் பாண்டியனின் காலம். "அப்படி என்ன இவன் சிறந்தவன்?" என்று கேட்கின்றீர்களா. இவன் காலத்தில் தான், ஈசனின் திருவிளையாடல்கள் நிறைய நடந்து ஏறியது. அதில் முக்கியமானது, (சிவன், விறகு விற்ற கதை தெரியும் ஆனால், விறகு விற்ற சிவன் மாணிக்கத்தை விற்கவும் மதுரைக்கு வந்த கதை தெரியுமா? ஆம், இது அபிஷேக பாண்டியன் காலத்தில் நடந்த சம்பவம்) இவன் மணி முடியில், மாணிக்கம் மட்டும் இல்லாத குறை. இதற்காக, அந்தப் பரம் பொருளே இறங்கி வந்து, இவனுக்கு மாணிக்கம் விற்ற கதை உண்டு (ஆதாரம் : திருவிளையாடல் புராணம்).
ஈசன்
அதே போல இவனுக்காக, வருணன் வற்றாது பொழிந்து உருவாக்கிய கடலையே இவன் பொருட்டு வற்ற செய்து பின் மீட்டுக் கொடுத்தது ஈசனின் இன்னொரு திருவிளையாடல், அந்த வரிசையில், இவன் காலத்தில் தான் கல் யானை, கரும்பு தின்ற கதை நடந்தது. இதற்குக் காரணம், சுந்தரானந்தர் என்னும் சித்தர்.
மேலும் சொல்லப்போனால், ஒன்றான அவன், உருவில் சிவசக்தி எனும் இரண்டாகி, நன்றான செம்மொழியில் மூன்றாகி, வேதங்களில் நான்காகி, பூதங்களில் ஐந்தாகி, சுவைகளில் ஆறாகி, சுரமாகிய மொழி அதில் ஏழாகி, திசைகளில் எட்டாகி, ரசங்களில் ஒன்பதான அந்த ஈசன்.
பித்தன், பேயன், ருத்ரன், கபாலன், சடையாண்டி, பிச்சாண்டி அகோரன், அனந்தன், என்ற பெயர்களுடன் தன்னை சித்தனாக்கி சுந்தரனார் என்ற வடிவில் வந்து, ஒரு அழகிய திருவிளையாடலை நடத்தியது இந்த அபிஷேக பாண்டியன் காலத்தில் தான்.
சுந்தரானந்தர் திருவிளையாடல்
சுந்தரானந்தர் வருகை
அன்று, வழக்கம் போல ஒரு காலைப் பொழுது. உலகத்திற்கு விடிந்தது என்பதை விட, மதுரை மாநகருக்கே அன்று ஒரு புது விடியல். அதற்குக் காரணம் ஒரு சித்தர், இவர் சித்தரா? அல்லது அந்த மன்மதன் தான், பாண்டிய நாட்டின் இளம் பெண்களின் கர்ப்பை சோதிக்க மரவுரி தரித்து வந்தானா? என்று எல்லோரும் எண்ணத் தோன்றும் அளவுக்கு ஒரு அழகு. நெற்றியில் விபூதிப் பந்தல், சக்தியும், சிவமும் ஒன்றுக்குள், ஒன்று ஐக்கியம் என்று கூறும் படி மையத்தில் ஒரு குங்குமத் திலகம். செவிப் புலத்தில் ஒரு கனக குண்டலம், இதற்கு அழகு சேர்க்கும் விதமாய், கழுத்தில் அழகிய ஸ்படிக மணி, பறந்து விரிந்த மார்பு, அதில் பளீரென்று பூணூல். நடந்து வரும் தோரணையே ஒரு நளின சிங்காரம். தேஜஸ், என்ற பொருளின் அர்த்தம், இப்பொழுது முழு வடிவம் பெற்றிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஒரு அற்புத அழகு. அந்த, சுந்தர வடிவத்தைப் பார்த்தவுடனேயே, பலர் கை கூப்பியது இயல்பு தானே.
பதிலுக்கு, சுந்தரர் அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார். அந்த வரிசையில் பெருநோய் பிடித்து வாடிய பெரும்புலவர் ஒருவர், சுந்தரர் கண்ணில் படவே அந்தப் புலவர், அந்த சுந்தரனின் பார்வை பட்டு பரிசுத்தமடைந்து மகிழ்ந்தார். இந்த விஷயம் மதுரை மாநகரம் முழுவதும் பரவியது. மேலும், அவரது தமிழ் புலமையால், தமிழ் அறிஞர்களே, அவருடன் வாதத்தில் தோற்றனர். நகர் முழுக்க அவரைப் (சுந்தரானந்தர்) பற்றிய பேச்சாகவே இருந்தது.
கிளி ஆக்கி விடுவேன்
இது அரசர் காதுக்கும் போனது. விடுவாரா,
அபிஷேகப் பாண்டியன், அரசனுக்கே உரிய
செருக்கோடு, சுந்தாரானந்தரை அவைக்கு வரச் சொல்லி தனது சேவகர்களை அனுப்பினார். ஆனால், அது எத்தனை பிழையான செயல் என்பதை அவர் எண்ணிப் பார்க்கவில்லை.
உண்மையில் அரசன் அல்லவா, ஞானம்
பொருந்திய சுந்தரானந்தரை முறைப்படி வந்து பார்த்திருக்க வேண்டும். என்ன செய்ய? அரசனுக்கே, உரிய செருக்கு அவனையும் விட்டு வைக்க வில்லை. அவனுக்குள் இருந்த அந்த
நான்
என்ற அகங்காரம் தான் இதற்குக்
காரணம்.
அதற்கு சுந்தரானந்தரும் ஒரு பாடம் கற்பிக்கத் தயார் ஆனார். அந்த சித்த புருஷரை அழைக்க சேவகர்கள் அவரது முன் வந்தனர். அவர்கள், சொல்வதைக் கேட்ட சுந்தரானந்தர். அரச கட்டளைக்கு பணியவில்லை, மேலும் வந்த சேவகர்களிடம் ஆற்றில் குளிக்க ஒருவன் ஆசைப்பட்டால், அவன் அல்லவா ஆற்றுக்கு வர வேண்டும் என்று வினவினார். ஆனால், அந்த வீரர்களோ, அவரை விடுவதாக இல்லை. அவரை வற்புறுத்தி தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயற்சி செய்தனர். சுந்தரானந்தர், அவர்களின் பேச்சால், தனது பொறுமையை இழந்தார். கோபத்தின் விளிம்புக்கு வந்த அவர், அந்த வீரர்களிடம்," இதற்கு மேல் ஏதாவது பேசினால், உங்களை கிளி ஆக்கி விடுவேன், ஜாக்கிரதை" என்று ஒரு போடு போட்டார். அதைக் கேட்ட சேவகர்கள், பயந்து அரண்மனைக்கு சென்று அரசனிடம் நடந்ததை கூறினார்கள். இதைக் கேட்ட, அரசன் திகைத்தான்.
கோபம்
அன்றில் இருந்து, அவனுக்கு அந்த சித்த புருஷரின் நினைப்பு மட்டும் தான். இந்நிலையில், ஒரு நாள், ஆலவாய் அழகன் திருக் கோவிலுக்குள் மன்னன் சென்ற சமயம். சுந்தரானந்தரும், அந்தக் கோவிலுக்கு சென்று இருந்தார். சுந்தரானந்தர், தனக்கு முன் கம்பீரமாக வருவதை கவனித்த அரசன் அபிஷேக பாண்டியன் கோபம் கொண்டான். ஏனெனில், அரசன் கோவிலுக்குள் வரும் பொழுது, அரசனுக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்கள் யாரும் அவன் எதிரில் தோன்றக் கூடாது. அப்படித் தோன்றினால் அது அரசனை அவமதித்த குற்றத்துக்கு சமம். இது தான் அரசனுக்கு, சுந்தரானந்தர் மீது வந்த கோபத்திற்குக் காரணம்.
இப்பொழுது, அதிகார கோபமும் தவஞான கோபமும் முட்டிக் கொண்டன.
சித்த சாகசங்கள்
நீ தான் மாயங்கள் நிகழ்த்தும் அந்த மாயாவியோ? உனக்கு உனது மாயாஜாலங்கள் மீது அவ்வளவு கர்வமா?" என்று முதலில் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தான் அரசன். சுந்தரானந்தர் "சித்த சாகசங்கள், மாயங்கள் அல்ல. ஏன், என்றால் மாயங்கள் அற்பமானவை. இல்லாததை இருப்பது போலக் காட்டுவது. அது வெறும் காட்சி. ஆனால் மறுபுறம் சித்த சாகசங்கள் என்பது பஞ்ச புதங்களை உணர்ந்து, பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல் படுத்தப்படுபவை. வேண்டும் ,என்றால் இங்கயே, அதற்கான பரிட்சை செய்து பார். நானும் உனக்கு புரிய வைக்கின்றேன்" என்று கூறினார் சுந்தரானந்தர்.
கல் யானை
சுந்தரானந்தர் இவ்வாறு கூறியதைக் கேட்டு அரசன் வெகுண்டான். சுந்தரானந்தரை சோதிக்க தயார் ஆனான். அபிஷேகப் பாண்டியன் தீர்க்கமாய் சிந்தித்தான். அவன் நின்ற இடத்திற்கு அருகில் தான் இருந்தது. ஆலய விமானத்தை தாங்கி நிற்கும் அந்தக் கல் யானை. நிதர்சனமாய்த் தெரிவது... மாயபிம்பம் அல்ல அது! (பொதுவாக, எல்லா ஆலயங்களிலும் கற்பீடங்களே கோயில் விமானத்தைப் பொதுவாக தாங்கி நிற்கும், ஆனால் ஆலவாய் அண்ணலான சொக்க நாதரின் ஆலயத்தை நாற்புறமும் வெள்ளை நிறத்து யானைகள் தாங்கி நிற்கக் காணலாம்) .
கல் யானை உயிர் பெறுதல்
அரசன் உடனே சுந்தரானந்தரைப் பார்த்து , தவசீலரே... நீர் சொல்வது உண்மை என்றால், இந்தக் கல் யானையை உயிர் கொண்ட யானையாக மாற்றுங்கள் பார்ப்போம். அப்பொழுது நான் நம்புகிறேன்” என்று கூறினான். பாண்டியன், பரிவாரத்தில், ஒருவன் கரும் போடு தென்பட்டான். அந்தக் கரும்பு, கண நேரத்தில் பாண்டியனின் கைக்கு மாறியது. அதுவும் கூட சுந்தரானந்தரின் திருவிளையாடல் தான். இப்பொழுது சுந்தரானந்தர், முகத்தில் புன்னகை உடன். அரசனை, அந்தக் கல் யானையின் அருகே, அந்தக் கரும்பை கொண்டு சென்று, சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கோரும் படி பணித்தார். அரசனும் அவ்வாறு செய்ய அந்தக் கல் யானை உயிர் பெற்று, அந்தக் கரும்பை சாப்பிட, அரசன் பார்க்க, அங்கிருந்த மக்களும் பார்க்க தனது தும்பிக்கையின் உதவியுடன் தின்று தீர்த்தது. அந்த யானை, அத்துடன் நிற்கவில்லை, பாண்டியனின் கழுத்தில் இருந்த முத்து மாலையையும் எட்டிப் பறித்தது. அரசன் அபிஷேகப் பாண்டியன் அப்படியே ஆடிப் போனான். சுந்தரானந்தர், பாதத்தில் விழுந்து தன் தவறை மன்னிக்குமாறு மன்றாடினான். இக்காட்சியைப் பார்த்த மதுரையம் பதி மக்களும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
இப்படியாக தவத்தின் வல்லமையை நிரூபித்த சுந்தரானந்தர் பூரிப்புடன் அனைவர் கண் எதிரில் ஆலவாயன் சந்நிதிக்குள் புகுந்து மறைந்தார். இவர் நடத்திய திருவிளையாடல்கள், இன்னமும் மதுரையில் வரலாறாய் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமாதி கூடல்
அவருக்கு ஸ்ரீவல்லபர் என்ற பட்டம் சூட்டி, அவர் மதுரையிலேயே நிலையாகத் தங்கி வாழ வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். கொஞ்சகாலம் வாழ்ந்த பிறகு சுந்தரானந்தரும் கோயில் வளாகத்திலேயே சமாதி பூண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் பெருங்கோவில், சுற்றுப் பிரகாரத்தில் துர்க்கையம்மன் சன்னதிக்கு அருகில் அவருக்கு உருவம் அமைத்து தனி சன்னதியும் அமைத்துள்ளனர். அந்த சன்னதியில் அவர் ஸ்ரீவல்லப சித்தராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார். அவருக்கு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. யானை உயிர்பெற்றுக் கரும்பைத் தின்றவுடன் சுந்தரானந்தர் சோம சுந்தரப் பெருமான் கருவறையுள் சென்று இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார் என்பது திருவிளையாடல் புராணக் கூற்று.
ஓம் ஸ்ரீ சுந்தரானந்த போற்றி
பதிலளிநீக்குஓம் ஸ்ரீ சுந்தரானந்த போற்றி
ஓம் ஸ்ரீ சுந்தரானந்த போற்றி