சந்நிபாதம் 13 வகைப்படும்.
அவையாவன: -
- சந்திரிகன்
- தாந்திரிகன்
- விப்பிரமன்
- கண்டகுச்சன்
- கண்ணிகன்
- சீகுவீகன்
- உத்திரன்
- அந்தகன்
- புக்குநேத்திரன்
- இரத்த சாட்யன் (சீதகன்)
- பிரலாபகன்
- சீதார்க்கன் ( சீதாங்கன்)
- அபின்யாசன் என்பன.
சந்நிபாதம் 13 வகைப்படும்.
முகத்தில் அதிகமாக வியர்வை காணும். ஓக்காளம் (வாந்தி எடுத்தல், கக்குதல்) உண்டாகும். வாயில் தித்திப்புச் சுவை ஏற்படும், நெஞ்சில் எரிச்சல் காணும். மனம் ஒரே நிலையில் இல்லாமல் அலையும். இவை கபச்சுரக் குறிகளாகும்.
பிதற்றல், புரளல் முதலானவை அதிகமாகக் காணும். அதிகமான தண்ணீர் தாகமேற்படும். நாக்கில் கசப்புச் சுவை காணும். நாவறட்சி உண்டாகும். சிறுநீர், மலம் முதலானவை தடைபடும். நாலா பக்கங்களும் பார்த்து விழிப்பான், கடுப்புவலி அதிகமாயிருக்கும்.
தேகத்தில் குளிர் அதிகரிக்கும். பயம் தோன்றும். உடம்பு சில்லிட்டு அடிக்கடி தூக்கிப் போடும், மயிர்க் கூச்சலறியும், தலைவலி ஏற்படும். தொப்புளைச் சுற்றி வலியும், நீர்க்குத்தலும் உண்டாகும். தாகம் அதிகரிக்கும். இவை வாத சுர லக்ஷ்ணங்களாகும்.