வாதசுரத்தின் குணம் கேளீர் வந்து குளிர்தல் பயப்படுதல்
சீதமிகுந்து துணுக்கெறிதல் செய்யமேனி சிலுப்பெறிதல்
தேதங்கண்டு தலைநோகுந் தீருந்தொப்புள் சலங்கடுக்கும்
பாதமொழிந்த நீர்குடியால் பலகால் வெதும்பி விடாததுவே.
தேகத்தில் குளிர் அதிகரிக்கும். பயம் தோன்றும். உடம்பு சில்லிட்டு அடிக்கடி தூக்கிப் போடும், மயிர்க் கூச்சலறியும், தலைவலி ஏற்படும். தொப்புளைச் சுற்றி வலியும், நீர்க்குத்தலும் உண்டாகும். தாகம் அதிகரிக்கும். இவை வாத சுர லக்ஷ்ணங்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக