Top bar Ad

6/1/19

சந்நிவாத நிதானம்‌

மிக்க சந்திரிகன்‌ தாந்திரீகன் விப்பிரமன்‌ கண்டகுச்சன்‌ உக்ர கண்ணி கன்சீகு வீகன்‌ னுத்திர னந்தகன்‌ பார் புக்கு நேத்திர னிரத்தசாட்யன்‌ புகழு பிரலாபகன்‌ சீதார்க்கன்‌ தக்க அபின்யாசன்‌ தன்னுடனே சாற்றுஞ்சன்னி பதிமூன்றே.

சந்நிபாதம்‌ 13 வகைப்படும்‌.


அவையாவன: -
  1. சந்திரிகன்‌
  2. தாந்திரிகன்‌
  3. விப்பிரமன்‌
  4. கண்டகுச்சன்‌
  5. கண்ணிகன்‌
  6. சீகுவீகன்‌
  7. உத்திரன்‌
  8. அந்தகன்‌
  9. புக்குநேத்திரன்‌
  10. இரத்த சாட்யன்‌ (சீதகன்‌)
  11. பிரலாபகன்‌
  12. சீதார்க்கன்‌ ( சீதாங்கன்‌)
  13. அபின்யாசன்‌
  14. என்பன.

5/1/19

சிலேத்ம சுர லக்ஷ்ணம்‌

முகத்து நீர்‌ வேர்க்கு முள்ளுவோக்காள மொடு தேக்கிடு வாய்நீர்‌ தானுந்‌ தித்திக்கும்‌ நெஞ்செரிக்கும்‌ தாக்கிடு மதுதானென்னுந்‌ தான்‌ பல சிந்தையாகும்‌ வாக்கனில்‌ நல்லோர்‌ கேளிர்‌ சேற்றுமச்சுரத்தின்‌ வாறே.

முகத்தில்‌ அதிகமாக வியர்வை காணும்‌. ஓக்‌காளம்‌ (வாந்தி எடுத்தல், கக்குதல்) உண்டாகும்‌. வாயில்‌ தித்திப்புச்‌ சுவை ஏற்படும்‌, நெஞ்சில்‌ எரிச்சல்‌ காணும்‌. மனம்‌ ஒரே நிலையில்‌ இல்லாமல்‌ அலையும்‌. இவை கபச்சுரக்‌ குறிகளாகும்‌.

பித்த சுரத்தின்‌ குறிகள்‌

பித்த சுரத்தின்‌ குணங்‌ கேளாய்‌ பிதத்து முழுத்தும்‌ பேய்போல மெத்தத்‌ தண்ணீர்‌ தாகமெனு மிகவுங்‌ கைக்கும்‌ நாவுலரு முற்றுஞ்‌ சிறுநீர்‌ மலந்தானு மொழிசேர்‌ குதத்திலம்‌ மிக்குஞ்‌ சுத்திப்‌ பார்க்கு முகமுங்‌ கடுக்குஞ்‌ சொல்லா மிடறும்‌ புண்ணாமே

பிதற்றல்‌, புரளல்‌ முதலானவை அதிகமாகக்‌ காணும்‌. அதிகமான தண்ணீர்‌ தாகமேற்படும்‌. நாக்கில்‌ கசப்புச்‌ சுவை காணும்‌. நாவறட்சி உண்டாகும்‌. சிறுநீர்‌, மலம்‌ முதலானவை தடைபடும்‌. நாலா பக்கங்களும்‌ பார்த்து விழிப்பான்‌, கடுப்புவலி அதிகமாயிருக்கும்‌.

2/1/19

வாத சுரத்தின்‌ குறிகள்‌

வாதசுரத்தின்‌ குணம்‌ கேளீர்‌ வந்து குளிர்தல்‌ பயப்படுதல்‌ சீதமிகுந்து துணுக்கெறிதல்‌ செய்யமேனி சிலுப்பெறிதல்‌ தேதங்கண்டு தலைநோகுந்‌ தீருந்தொப்புள்‌ சலங்கடுக்கும்‌ பாதமொழிந்த நீர்குடியால்‌ பலகால்‌ வெதும்பி விடாததுவே.

தேகத்தில்‌ குளிர்‌ அதிகரிக்கும்‌. பயம்‌ தோன்‌றும்‌. உடம்பு சில்லிட்டு அடிக்கடி தூக்கிப்‌ போடும்‌, மயிர்க்‌ கூச்சலறியும்‌, தலைவலி ஏற்படும்‌. தொப்புளைச்‌ சுற்றி வலியும்‌, நீர்க்குத்தலும்‌ உண்டாகும்‌. தாகம்‌ அதிகரிக்கும்‌. இவை வாத சுர லக்ஷ்ணங்களாகும்‌.