நடுக்கம் அதிகரிக்கும். எரிச்சலும், அழற்சியும் உண்டாகும். கண்கள் சிவக்கும். அடிக்கடி தண்ணீர் தாகமுண்டாகும். உடம்பு முழுவதிலும் எரிச்சல் வரும். இது பித்த வாத அய்யக் குறி குணங்களாகும்.
Top bar Ad
26/1/19
பித்த வாத அய்யக் குறிகள்
அசரு முலையும் நடுக்கிவிடும் அடுத்தே வெதுப்பு மழத்திவிடும்
பசருங் கண்ணுஞ் சிவந்துவரும் பலகால் தண்ணீர் தான்வேண்டும்
முசறு மவிக்கு முடம்பெல்லாமுழுதுமுழத்தி வருங் கண்டாய்
நசையும் பித்தவாதமய்யின் நவின்ற குணங்க ளிவைதாமே.
25/1/19
வாத பித்த அய்யக் குறிகுணம்
தித்தித்திருக்கும் நாவுலரும் சிறுக்குங் கடுக்கும் பசியில்லை
முத்தி வலிக்கு முகங்கடுக்கு மூக்கில் நீராய்க் கண்சிவக்கும்
சத்தியெடுக்கும் வயிரிழியாத் தம்பம்போல கிடத்திவிடுந்
தெத்தும் பித்த வாத அய்யின் சேருங் குணங்க ளிவைதானே.
வாயில் தித்திப்பு நிற்கும். நாக்கு வறண்டு போகும். முகம் சிறுத்து விடும் பசியெடுக்காது. முகத்தில் கடுப்பு வலி தோன்றும். மூக்கிலிருந்து நீர் வடியும். கண்கள் சிவந்து போகும். அதிகமான வாந்தி உண்டாகும். பேதியாகாமல் கட்டையைப் போல உடலைக் கடத்தி விடும். இவை வாத பித்த கபக் குறிகளாகும்.
24/1/19
திரிதோஷ சுரம்
விக்கலெடுக்குந் தலைவலிக்கும் வெள்ளோக்காளம் போக்கிவிக்கும்
மொக்கவலிக்கு முடம்பெல்லாம் உழத்தித்தவிக்கு முட்டணமாம்
திக்குந் திரைக்கும் நெடுமூச்சாஞ் செவியும் வயறும் தான் வலிக்கும்
பக்கம் வலிக்கும் திரிதோஷம் பகராய் நீயும் பகராயே.
விக்கல், தலைவலி, வெண்மை நிறமான வாந்தி, உடம்புவலி, உடம்பில் உஷ்ணத்துடன் எரிச்சல், நீண்ட பெருமூச்சு, காதுவலி, வயிற்றுவலியும், விலாப்புறம் வலியும் ஏற்படும்.
வாத சன்னி சுர லக்ஷ்ணம்
உண்டிட வுறக்கமில்லை யுழத்தியே யழத்தி வெப்புக்
கொண்டிடாக் குளிரைப்பண்ணும் கோபிக்கும்கறுக்கு நாக்கு
அண்டமும் வீங்கிப் பின்னும் அலறியே உடம்பு வீங்கும்
வண்டமாகுழலினாளே! வாதத்தின் சந்நிதானே.
தூக்கம் வராது. உடம்பு எரிச்சலும், உளரலும் அதிகரிக்கும். தாங்க முடியாத படி குளிர் உண்டாகும். நாக்கு கருமை நிறத்தையடையும். விதை வீங்கி, அதன் பிறகு உடம்பு வீங்கும். இது வாதசந்நியாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)