மூட்டுகளிலும், தலையிலும், வலியுடன் உடம்பிலும் எரிச்சலுண்டாகும். வாய் வறண்டு போய்க் கருமை நிறமாகும். தோள்பட்டைகள் கூனும். தூக்கம் இருட்டு முதலான சமயங்களில் திடுக்கிட்டு எழுவான். இது வாத பித்தச்சுர லக்ஷணங்களாகும்.
Top bar Ad
21/1/19
வாத பித்த லக்ஷ்ணம்
சந்தொடு தலையும் நொந்து தழத்தியேரளைப்பு முண்டாய்
வந்துமேல் வெதுப்பி வாயும் வறண்டுதான் கருகிப்பின்னை
கந்தரந் தாழ்ந்துறக்கங் காரிருள் திகைப்புண்டாகு
மத்தரத்தனத்தினாளே! வாத பித்தத்தின்வெப்பே
20/1/19
பித்தச்சுரத்தின் வேறு குறிகள்
நாசிநீர் சிவப்புமுண்டாய் தலைவலி னோவுமுண்டாய்
கூசவே நழுந்து கொம்பிக் கொடியதோர் அழத்தியுண்டாய்
வாசமென் குழலாய் தாக மருவிடு நோவுமுண்டாய்
பேசலாம் வெப்பிற்றண்மை பித்தத்தின் சுரமதாமே.
மூக்கிலிருந்து வடியும் நீர் சிவந்து, தலைவலியுடன் தேகம் அழற்சியுற்று, தாகம் முதலானவை ஏற்படில் அதுவும் பித்தசுரக்குறிகளாம்.
19/1/19
சிலேத்தும சுர லக்ஷ்ணம்
மூக்குநீர்வெள்ளோக்காளம் முடுகிடுஞ் சுவாசமுண்டாந்
தேக்கிடும் வாய்நீரூறித் தித்திப்புங் குளிருஞ் செய்யும்
.......ன் வெழுத்திருக்கும் பலபலவுறக்கமுண்டாந்
தீக்குமே நெஞ்செரிக்குஞ் சேற்றுமச்சுரமதாமே.
மூக்கிலிருந்து நீர் ஒழுகும். வெண்மை நிறமாக வாந்தியாகும். சுவாசம் அதிகரிக்கும். ஏப்பம் உண்டாகும். வாயில் தித்திப்புச் சுவையுடன் நீர் ஊறும். குளிர் அதிகரிக்கும். அதிகமான நித்திரை, நெஞ்சுக்கரிப்பு முதலான குறிகள் காணில் அது கபச்சுரமாம்.
பித்த சுர லக்ஷ்ணம்
பித்தச்சுரத்தின் குணங்கேளீர்! பிதற்றுமுழற்று முடம்பெல்லாம்
மெத்தத்தண்ணீர்தான் வேண்டு மிகவுங்கை க்கும்நாவுலரும்
முத்தச்சிறுநீர் மலந்தானு மொழிசேர் நயனம் மஞ்சணிக்கும்
சுத்திப்பார்க்கு முகங்கடுக்குஞ் சொல்லாமிடறும் புண்ணாமே.
பிதற்றல், உடம்பு எரிச்சல், தண்ணீர்த் தாகம், வாயில் கைப்புச்சுவை, நாக்கு உலர்ந்து போதல், சிறுநீர் மஞ்சளாக இறங்குதல், மலமும் மஞ்சளாதல், கண்களில் மஞ்சள் நிறம், முகத்தில் எரிச்சல், வாய் வேக்காளம் முதலான குறிகள் காணும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)