Top bar Ad

12/1/19

ருத்திரன்‌ குணம்

மோகம்பிரலாப தாபமும்‌ மொழியும்‌ நெஞ்சு நோவாகும்‌ வேகம்‌ பிரமை யிளைப்புடனே வேதனையாகும்‌ மிகத்தாபம்‌ பூகச்சுவாசமிவைகண்டால்‌ பொல்லாச்சந்நிருத்திரகன்‌ பாகமொழியாயுமக்குரைத்தோம்‌ பாராய்‌ நூலின்‌ படிதானே.

மயக்கம்‌, வாயுலரல்‌, நெஞ்சுவலி, மூர்ச்சை, இளைப்பு, உடம்புவலி, எரிச்சல்‌, மேல்மூச்சு இவைகள்‌ காணப்பட்டால்‌ அது ருத்திர சந்நியாகும்‌

சீகுவிகன் குணம்‌

உடம்பு நடுங்கி நாவிசித்து உரத்தே யிழுக்குஞ்‌ சுவாசமுடன்‌ தடம்பு காசஞ்‌ செகுட்டுடனே சாற்றுமூமைத்‌ தாபமுடன்‌ நடம்பு முடம்பின்‌ பலங்குறையும்‌ நமனாருஞ்சீவிக நீதென்று குடம்போல்‌ முலையீர்‌! உமக்கென்று குணங்களுரைத்தோ மறிவீரே.

தேகமெங்கும்‌ நடுக்கலுண்டாகும்‌. நாக்கு இழுத்துவிடும்‌, மேல்மூச்சு வாங்கும்‌. இருமல்‌ இருக்கும்‌. உடம்பெரிச்சல்‌ அதிகமாயிருக்கும்‌. உடம்பு பலமும்‌ குறைவடையும்‌. இவை சீகுவிகன்‌ குறிகள்‌ எனத்‌ தெரிந்து கொள்ளவும்‌.

கர்ணிகன்‌ குணம்‌

காய்ச்சல்‌ பெருகுமேல்‌ மூச்சாங்‌ காதினடியில்‌ தான்வீங்கும்‌ வாச்சல்‌ நடுக்கல்‌ பிரலாபம்‌ வளரும்‌ நோவும்‌ நெஞ்சுலரும்‌ வாச்சல்‌ வயிறு வலியுடனே வருத்து மெய்யை மிக நோகும்‌ பூச்சக்கர்ணிகன்‌ குணங்கண்டால்‌ பொல்லாதென்னும்‌ புலவீரே.

சுரமடிக்கும்‌. மேல்‌ மூச்சு வாங்கும்‌. காதின் அடியில்‌ வீக்கமிருக்கும்‌. நடுக்கல் ஏற்படும்‌. உலரல்‌ இருக்கும்‌. நெஞ்சில்‌ வரட்சை அதிகரிக்கும்‌. வயிற்று வலி உண்டாகும்‌. உடம்பு வலியும்‌ ஏற்படும்‌. இவை கர்ணிக சந்தியின்‌ குறிகளாகும்‌.

கண்டகுச்சகன் குணம்

தாபமேல்‌ மோகமாகும்‌ வாதமாந்‌ தலைவலிக்கும்‌ கோபமே மேச்சுவாசம்‌ கூறிய பிரலாபந்தான்‌ தூபமாங்‌ கண்டகுச்சன்‌ சொன்னவிக்‌ குறிகள்‌ கண்டால்‌ பாவமாம்‌ வாகடத்தின்‌ படியீதெனவே குறியீரே.

உடம்பு எரிச்சலுடன்‌ மயக்கம்‌ காணும்‌. தலைவலி உண்டாகும்‌. கோபம்‌ அதிகரிக்கும்‌. மேல்‌ மூச்சு காணும்‌. இக்குறிகள்‌ காணப்பட்டால்‌ அது கண்டகுச்ச சந்நியாகும்‌.